நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி மகேந்திரம்
வயது 6811 செப்டம்பர், 1950 – 5 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் வளர்த்த புகழ் பெற்ற புலவரான தங்கதாத்தா என அனைவராலும் அழைக்கப்படும் சோமசுந்தப்புலவர் வாழ்ந்த நவாலியில் 11/SEP/1950 இல் திரு.திருமதி வல்லிபுரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மகளாய் மனோன்மணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குணரட்ணம்,சத்தியவான் போன்றவர்களின் சகோதரியாக மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனான Manager,Easttown Banguet Hall செல்லத்துரை மகேந்திரம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நிருஷா மகேந்திரம் எனும் அன்புப் பிள்ளையை பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மணியக்கா என ஊரவரால் அன்பாக அழைக்கப்படும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்05.08.2019 இல் 68 வயதில் கனடாவில் உள்ள Stouffville நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் வேண்டுகிறோம்.
புன்னகை முகமே பூவிழிப் பார்வையே
தண்குளிர் மலரே தாயே
தாமரைப் பொட்டே
எம் மலர்க் கண் வாடாது
என்னுடன் வாழ்ந்து
எங்கே போனீர் எமைப் பிரிந்து
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

