மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி முத்துத்தம்பி
வயது 8831 டிசம்பர், 1930 – 17 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி முத்துத்தம்பி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா முத்துத்தம்பி(J.P, இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புமிகு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(கௌரி), கேதீஸ்வரன்(வரன்), காலஞ்சென்ற ஜெயஈஸ்வரி(ஜெயந்தி), உமையீஸ்வரி(வதனி), சுகுணா, சிவபாலன்(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், கமலாதேவி, பாலசிங்கம், காலஞ்சென்ற சிவகுமாரன், யோகநாதன், அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கு.வி செல்வத்துரை, கு.வி தம்பித்துரை, மனோரஞ்சிதம், கு.வி மகாலிங்கம், கு.வி அமிர்தலிங்கம் மற்றும் கமலாம்பிகை(கனடா), கு.வி பஞ்சலிங்கத்துரை(Southampton) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பரிமளம் மற்றும் புஸ்பமணி, கனகசபை, ரஞ்சி, தேவி, ரூபி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும்,
ஜெனி, ஜெசி, சாய், ஜெனனி, டினோ, வினோபா, அர்ஜ்னா, இலக்கியா, கஸ்தூரி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்கிசான், ஐலா, சாரன்ஜினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 5ம் வட்டாரத்தில் 31/DEC/1930 ஆம் ஆண்டில் திரு.திருமதி விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக மனோன்மணி அவர்கள் கு.வி செல்லத்துரை, கு.வி தம்பித்துரை, மனோரஞ்சிதம், கு.வி மகாலிங்கம், கு.வி அமிர்தலிங்கம், கமலாம்பிகை, கு.வி பஞ்சலிங்கத்துரை போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி. கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான அதிபரும்,Jp யும் ஆன திரு.முத்துத்தம்பி அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெகதீஸ்வரி(கௌரி), கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி(ஜெயந்தி), உமையீஸ்வரி, சுகுணா, சிவபாலன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயபாலன், கமலாதேவி, பாலசிங்கம், சிவகுமாரன், யோகநாதன், அருட்செல்வி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.06.2019 இல் 88 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு மலரே
......அன்னை முகமே
அணைத்து மகிழ்ந்த
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
....அகிலம் துறந்தது
அன்னை மடியின்
.....ஆயுள் முடிந்தது"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

