மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை பிலிப் ராஜநாயகம்
இளைப்பாறிய துணை அதிபர்
11 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாளையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பிலிப் ராஜநாயகம் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சுவக்கீனா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை பிளசம்(Blossom) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பியற்றிஸ்(ரஞ்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,
கீத்தா(Geetha- ஐக்கிய அமெரிக்கா), விஜித்தா(கனடா), அலன்(Allen- லண்டன்), கிலன்(Glen- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, மனுவல்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜஸ்ரின்(Justin), அரவிந்தன், சிறோ(Shiro), சுவீற்றா(Sweeta) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவிஸ்(Travis), றமி(Ramy) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து 17-12-2016 சனிக்கிழமை அன்று 307 Royal Oak Heath NW, Calgary, AB T3G 0B6, Canada என்னும் முகவரியில் நடைபெறும் இராப்போசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

