மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரிஷால் சவிரி திருச்செல்வம்
வயது 7415 நவம்பர், 1944 – 14 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி வியாகுலம் தம்பதிகளின் அன்பு மகனும்,
றீற்ராம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்கெல்மன், அனுஷியா, அனா, எமெல்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியா, யோனாஸ், நிரோஜித், சுதா ஆகியோரின் அன்பு மாமவும்,
சவினம்மா, றீசன், ரெஜினா, லூர்த்தம்மா, மலரம்மா, மரியநாயகம், கிறேஸ்பவுலின், பிலோமினம்மா, அரியநாயகம், திருஞானபொக்ஷம், தேவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாஸ், யோன், அன்ரனி, ஜெபரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானமலர், லில்லிமலர், பரமேஸ்வரி, ராணி, றீற்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாறோன், சிமியோன், மீலா, லூயிஸ், நெய்லா, நிக்சன், ஏமில், அஜெய், ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நாரந்தனை வடக்கில் 15/NOV/1944 ஆம் ஆண்டில் திரு.திருமதி சவிரி வியாகுலம்தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் சவினம்மா, றீசன், ரெஜினா, லூர்த்தம்மா, மலரம்மா, மரியநாயகம், கிறேஸ்பவுலின், பிலோமினம்மா, அரியநாயகம், திருஞானபொக்ஷம், தேவரத்தினம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், றீற்ராம்மா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஸ்கெல்மன், அனுஷியா, அனா, எமெல்சன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பிரியா, யோனாஸ், நிரோஜித், சுதா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஷாறோன், சிமியோன், மீலா, லூயிஸ், நெய்லா, நிக்சன், ஏமில், அஜெய், ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன்,பொது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.06.2019 இல் 74 வயதில் ஜேர்மனியில் உள்ள Essen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்பு முகம் ஒன்று
........அள்ளி அணைத்தது
பண்பு மனம் கொண்டு
........பாசம் பொழிந்தது
வண்ண விழி உருட்டி
........காவல் புரிந்தது
எண்ணம் கலைந்து
........எமைப் பிரிந்தது
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

