ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்

பொறியியலாளர்

வயது 3716 ஜூன், 1981 – 12 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் எமில் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நண்பர்களாக பல்கலைக் கழகத்தில் இணைந்தோம்
பல கலைகளை ஒன்றாக கற்றோம்,
நண்பர்களாக சுற்றித்திரிந்தோம் பல்கலைகழகம் சிறியதாய் தெரிந்தது
நம் நட்புறவில்
மகிழ்ச்சியாய் நாழிகை பல கடந்தன
உன் சிரிப்பூட்டலில் மட்டுமே நண்பா,
உன் நினைவுகளை வாழ்வில் மறந்திட எம்மால் இயலாதடா நண்பா,
நினைத்து பார்த்தால் துயரம் மட்டுமே பெருமலை போல்....
இன்று நீ மட்டும் தனியாக எம்மை விட்டு போக நினைத்தது ஏனடா!
நண்பா விடை தெரியாமல் விம்மி விம்மி அழுகின்றோம் - நீயின்றி
தாங்க முடியவில்லையடா- தவிக்கிறோம்
போய்வாடா நண்பா...

எமது உயிர்த்தோழனின் பிரிவால் துயருற்று இருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். நண்பனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

இப்படிக்கு அழுத விழிகளுடன் மொறட்டுவை பல்கலைக்கழக நண்பர்கள் (2002/2003 வருடம்).

— நண்பர்கள்

வாழ்க்கை வரலாறு

இலங்கைத் தீவின் அழகும் தொன்மையும் நிறைந்த புனித பூமியும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளதும், வரலாற்றுக் காலங்களில் மிக முக்கிய இடமுமான எழில் மிகு மன்னாரில்16-05-1981 இல் மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்கள் இவ் அழகு நிறைந்த தமிழர் பூமியில் அவதரித்தார்.

மேலும் அன்பும் ஆளுமையும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து அழகிய மகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும்(2002-2003) சிறந்த பொறியியலாளருமாக திகழ்ந்தார், இதே வேளை கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர், அத்துடன் இவரைச் சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும், ஏனெனில் நகைச்சுவையாக உரையாடுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.

இவ்வாறு மனைவி, பிள்ளை நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12-04-2019 இல் 37 வயதில் எழில்மிகு மன்னாரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"ஆசை நண்பா
அன்புத் தோழா
பாச மலரே
பல்கலை நண்பனே
நேச உள்ளமே
நெஞ்சில் தங்கி
மன்னார் முத்தே
மனங்களில் நிலைத்து
விம்மி அழ வைத்து
விடை பெற்றது ஏன்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.