மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு பாலசுப்பிரமணியம்
பிரபல தொழில் அதிபர்- MMB கலேவல, கிளிநொச்சி, வவுனியா
வயது 8421 பிப்ரவரி, 1935 – 30 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் பாலாவோடை
- வாழ்ந்த இடம்
- கலட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினிதேவி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
தேவராசா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மயில்வாகனம் மற்றும் இராமநாதன், செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுப்பிரமணியம், செல்லத்துரை, தெய்வானை மற்றும் உருக்குமணி, சிவசம்பு, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவபாலன், சிவஞானம், சிவபாக்கியம் மற்றும் சிவராசா, சிவலட்சுமி, சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், ஹரிசன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும், பிரசித்தி பெற்ற சிவன் ஆலயம் அமைந்துள்ளதும், வாழைத்தோட்டம், புகையிலைத் தோட்டம், மரக்கறித்தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/காரைநகர் களபூமி பாலாவோடையில் 21/FEB/1935 இல் மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்னம்மா, பாக்கியம், மயில்வாகனம், இராமநாதன், செல்லம்மா, தையல்நாயகி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அன்பும் பண்பும் நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடம் கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அழகு நிறைந்த பெண்ணான தவமணி அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நந்தினிதேவி என்ற அழகுப் பிள்ளையை பெற்று வளர்த்ததுடன் தேவராசா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை செய்ததுடன் அருண், ஹரிசன், ஆரணி ஆகிய பேரப்பிள்ளையை தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் MMB என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் பிரபல வர்த்தகரும், தொழிலதிபருமான இவர் மார்க்கண்டு அன் சன்ஸ் ஸ்தாபனத்தின் முகாமைத்துவ பங்காளராகவும் விளங்கியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 30.04.2019 இல் 84 வயதில் கலட்டி அம்மன் வீதியடியில் உள்ள தனது வீட்டில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்பு உள்ளம்
......அழகிய உருவம்
உழைப்பின் சிகரம்
......உத்தம மனிதர்
விடா முயற்சியால்
.....வென்ற தொழிலதிபர்
விட்டுச் சென்றார்
......விம்ம விட்டு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

