நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு தெய்வேந்திரம்
வயது 8315 டிசம்பர், 1935 – 18 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- Sangarathai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த சித்தன்கேணியில் 15/DEC/1935 இல் மார்க்கண்டு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தெய்வேந்திரம் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அரசரத்தினம் எனும் ஒரே ஒரு உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், இரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் கமலராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து புஸ்பலதா, விஜயேந்திரன், சிறி, புஸ்பசெல்வி, சுகந்தினி, மைதிலி, சிவானந்தன், பொன்திருமலர், நித்தியசக்தி, சாமினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தனுஜா, தவனேசமலர், சதானந்தன், கேதீஸ்வரன், தயாபரன், வாகீஸ்வரி, கோணேசதாசன், சுரேஸ்குமார், சேந்தன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து சஜீவன், சஜீதா, கஜானா, கிருத்திகா, கிருஷாந்த், மகிழினி, நிதர்சன், தீவிகா, வினுஜா, லக்ஷிகா, ஆகாஷ், திருமகள், திஷானன், லாவண்யா, தாஜினியா, மதுரங்கன், கஜானன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.07.2019 இல் 83 வயதில் சங்கரத்தையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மண்ணில் விளைந்த மழலை மனமே
எண்ணில் அடங்கா இன்பம் தந்து
கண்ணில் வடியும் நீர் துடைத்து
விண்ணில் நிலவாய் மிளிந்தீர்
கண்ணாடி முகம் கான
என்னாளும் ஏங்குது மனது
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

