ஆறுதல்

மரண அறிவித்தல்

மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்

ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்

வயது 8124 ஜூலை, 1937 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று Scarborough கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் மார்ஷல் றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சத்தியநாதன் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா, ரஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜன், நிலாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சய், ஷரோன், யோசுவா, பிறெண்டன், அஸ்ரன், ஷெரினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற லோரன்ஸ், புளோரா(பேபி), அன்ரனி(நெல்சன்), காலஞ்சென்ற ஸ்ரெலா(சந்திரா), அருளானந்தம்(அரியராசா), கிப்பொலிற்றா(சறோ), ஹெலன் ஜெசி(ராஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியதாசன், மகேஸ்வரி, மரியதாசன், எட்வேட், திரெசா(கனி), கொன்சி, அன்ரனிபிள்ளை, காலஞ்சென்ற கிளரிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 24/Jul/1937 ஆம் ஆண்டில் திரு.திருமதி ஜேம்ஸ் மார்ஷல் றோசலின்தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சார்ள்ஸ் கிளிபேட் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் லோரன்ஸ், புளோரா, அன்ரனி, ஸ்ரெலா, அருளானந்தம், கிப்பொலிற்றா, ஹெலன் ஜெசி போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், சத்தியநாதன் சிசிலியா தம்பதிகளின் அன்பு மகள் ரஞ்சினி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ராதிகா, ரஜீவ் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ராஜன், நிலாந்தி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சஞ்சய், ஷரோன், யோசுவா, பிறெண்டன், அஸ்ரன், ஷெரினா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்றாக படித்த இவர் புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்புள்ளம் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.07.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

உயிருக்குள் கலந்த
உறவாய் மாறிய
உணர்வுக்குள் உணர்வாய்
உரிமையாய் வாழ்ந்திட்ட
உண்மையாய் உலவிய
உயர்ந்த உள்ளமே
உறங்கினீர் ஊமையாய்
உறவுகள் அழுகிறோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.