மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி ஞானமணி யோசவ்
வயது 9613 மே, 1920 – 10 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி ஞானமணி யோசவ் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மெல்கியோர் மரியாம்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற யோசவ்(இளைப்பாறிய ஆசிரியர்- மிருசுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதுரம்(லண்டன்), ராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருட்சகோதரி சன்றா, தவராஜ்(லண்டன்), யோகா(லண்டன்), புவிராஜ்(பணிப்பாளர் நிதி அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செபஸ்ரியன்(லண்டன்), காலஞ்சென்ற விஜயசிங்கம், ரஜனி(லண்டன்), கிருஸ்தோப்பர்(லண்டன்), யசோ(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-02-2017 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதி என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

