ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி ஹெலன் ஜோசப் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி ஹெலன் ஜோசப்

வயது 7625 ஏப்ரல், 1942 – 11 நவம்பர், 2018

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சூசையப்பர் வீதி 10ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு செல்வபுரம் ஆகிய இடங்களை புலம்பெயர் வதிவிடமாகவும் கொண்ட மேரி ஹெலன் ஜோசப் அவர்கள் 11–11–2018 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு செல்வபுரத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சில்லாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பவுலின் அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சீமான்பிள்ளை ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

செபமாலை மேரி(கிளி), மரிய கொறற்றி(யோகம்), மேரி புளோரின்(இந்திரா- கனடா), மேரி மெற்றில்டா(சந்திரா– பிரான்ஸ்), கிறிஸ்தோ ஜெகதீஸ்பரன்(ராஜன்– கனடா), மேரி திரேசா(றதி– பொது வைத்தியசாலை, வவுனியா), மேரி புஸ்பம்(விஜி– பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா(இரணைப்பாலை), மேரி மாகிறேற்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(யூட்– முல்லைத்தீவு செல்வபுரம்), லூக்காஸ்(பாலன்), மற்றும் பெனில்ட்(Benild– கனடா), அன்ட்ரூ ஜெயசிங்கம்(ஜெயா -பிரான்ஸ்), ஆன் தர்சனா(மலர்– கனடா), காலஞ்சென்ற சஞ்சீப் மற்றும் சுஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜூட் துஸ்யந்தன்(லண்டன்), ஜேம்ஸ் நிரஞ்சன்(பிரான்ஸ்), அன்ரன் ஜூட்(பிரான்ஸ்), ஜூடித் துஸ்யந்தி, சுமித்திரா, சுஜிதா, சுஜிகலா(ஆசிரியை- புதுக்குடியிருப்பு), பிறின்ஸ்ரன் - அருன்ஸ்ரன்(கனடா), அனுஸ்வின், யனுஸ்வின், சதுஸ்வின், சாறா(பிரான்ஸ்), அக்சயா, அபிசா, அபிசன்(கனடா), அறிவாளன்(வவுனியா), லீசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆகித்தினா, அஸ்மிதா மேரி(லண்டன்), பகலவன், பிரணவி, லவீனா, பிரவீனா, சஞ்சய், ஜெனுசன், டனுஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14–11–2018 புதன்கிழமை அன்று முல்லைத்தீவு செல்வபுரத்தில் உள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.