மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதுமதி லோகேஸ்வரன்
வயது 375 ஏப்ரல், 1982 – 9 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jülich ஐ வதிவிடமாகவும் கொண்ட மதுமதி லோகேஸ்வரன் அவர்கள் 09-04-2019 செவ்வாய்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், லோகேஸ்வரன் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவறஞ்சன், தர்சினி, சிறிவிசாகன், காலஞ்சென்ற கவிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயமூர்த்தி, ஜெயரஞ்சினி, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மிளா, சப்திகா, சந்தோஸ் ஆகியோரின் அன்பு சித்தியும்,
கவிஸ், அக்சிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், ஈழத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் சூழ்ந்து காணப்படுவதுடன், நெல்வயல்கள் வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தரு மரங்கள் என அழகு நிறைந்த இணுவிலில் 05-04-1982 இல் லோகேஸ்வரன் சுகிர்தமலர் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக மதுமதி அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சிவறஞ்சன், தர்சினி, சிறிவிசாகன், கவிதரன் போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளாகி வீட்டின் பொறுப்பு மிகுந்த பெண் பிள்ளையாக திகழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பொறுமை சாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன், தனது சகோதரங்களில் அதிக அன்பு கொண்டவராகவும், அவர்கள் நலனில் கரிசனை நிறைந்த மனம் கொண்டதுடன். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிவதுடன் முதியவர்களை மதிக்கும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு அப்பா, அம்மா, சகோதரங்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09-04-2019 இல் 37 வயதில் ஜேர்மனியில் உள்ள Julich நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு மனமே......
அழகிய வதனமே
முத்துப் பல்லே......
முழுமதி உருவே
சங்குக் கழுத்தே....
சாந்த குணமே
சிறிய வயதில்.....
சாய்ந்தாய் மண்ணில் ""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

