45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் நந்தீஸ்வரன்
வயது 4711 ஜூலை, 1965 – 26 ஜனவரி, 2013
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.கல்வியங்காடு கட்டப்பிராய் வேளார்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் நந்தீஸ்வரன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்டமுகம் காண்பதெங்கே கனிமொழியும் கேட்பதெங்கே
அண்டமிதில் உனைபோலினி அரவணைக்க யாருண்டு
கொண்ட அன்புள்ளங்களின் குடியிருந்த கோயிலானாய்
தொண்டாற்றும் தூயவனே துடிக்கின்றோம் நீயெங்கே..!!
பூப்போன்ற மனமும் பொலிவான முகமுமினி
புவியினிலே போதுமென்று புறப்பட்டு போனாயோ
கூப்பிட்டானோ இறைவனெம் குடும்பத்திலிருந்துன்னை
குவிக்கின்றோம் கரங்களை கூட்டமும் ஆத்மாசாந்தி
நீசென்ற பாதையிலே நீரோடை ஓடட்டும்
தீ கூட தணிந்துவந்து தென்றலாய் வீசட்டும்
வானவர்கள் தேவர்கள் வரவேற்று ஏற்கட்டும்
போன இடம் உனதாத்மா பெற்றிடட்டும் சாந்தி சாந்தி சாந்தி..!!
அன்னார் அமரரான செய்தியை கேட்டு அறிந்தோடோடி வந்து உற்ற துன்பத்தில் கலந்தவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், பேஸ்புக் மூலம் அனுதாபச் செய்திகள் தெரிவித்தும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வழங்கியவர்களுக்கும் மேலும் எங்கள் வீட்டு வாசல் வரை வந்து நாம் தடுமாறிய நிலையில் இருந்தபோது எங்களுக்கும் ஆறுதல் கூறி, உணவு தேனீர் பரிமாறியவர்களுக்கும் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

