ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் மல்லிகாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் மல்லிகாதேவி

வயது 4922 மே, 1971 – 3 மார்ச், 2021

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி சங்கத்தார்வயல் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மல்லிகாதேவி அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

ஜெனுசன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா(டென்மார்க்), தவமணி, யோகநாதன், சிவமலர், நவரத்தினம்(இலங்கை), மகேஸ்வரி(டென்மார்க்), காலஞ்சென்ற இரட்ணசிங்கம்(குஞ்சன்- லண்டன்), சந்திராதேவி, இந்திரா, வசந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சின்னத்துரை, ரமனீஸ்வரி, காலஞ்சென்ற பொன்னம்பலம்(இலங்கை) மற்றும் சிவலிங்கம்(டென்மார்க்), தயாழினி, நவமணி, கனகசுந்தரம், ஞானேஸ்வரன், மோகனராசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாலினி, சிவாஜினி, செந்தூரன்(டென்மார்க்), மயூரன், பாமினி(லண்டன்), சுதர்சினி, ஜெனீத்திரா(இலங்கை), மாதூரஜா(நோர்வே), ஐஸ்வர்யா(டென்மார்க்), அபர்னா, சிந்துஜன், விந்தன், றதுஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சங்கவி, திஸ்மிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

யோகதர்சன், நிஷா, ரஜீவன்(இலங்கை), றாஜீகாந், நிக்‌ஷன்(டென்மார்க்), கபிலன், கஜீவன், வித்யா, வினுஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ் பச்சிலைப்பள்ளி இயக்கச்சியில், பரம்பரை இந்து குலத்து வேளாளர் குடியில் உதிர்த்த மயில்வாகனத்திற்கும், சாவகச்சேரி சங்கத்தானைகுடி பரமேஸ்வரி தம்பதிக்கும் கடை குட்டிக்கு மூத்தவளாய் 1971ம் ஆண்டு வைகாசி திங்கள் 22ம் நாளன்று மருத மண்ணாம் முரசுமோட்டை அரசினர் மருத்துவமனையில் கதிரொலியாய் உதிர்த்தவளே காரிகையாய் மலர்ந்தவளே பெற்றவரும் உற்றவரும் பேரன்பு கொண்டுண்னை மல்லிகாதேவி என்றழைத்தார் மல்லிகையாய் மணம் தந்தாய்.ஆரம்ப கல்வியினை இயக்கச்சி மாநகரின் அ.த பள்ளியிலே முன் அமர்ந்து கற்றவளே, உயர்தர கல்வியினை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடை விடா கற்றவளாம் போர் வந்து குடி விரட்டி பேரவலம் கூடி வர கல்வியை இடை விட்டு தவித்திருந்த வேளையில் பூவெய்தி பெரியவளாய் புதுவடிவம் பெற்றவணே பருவத்து உயர் நிலையில் பெற்றவர்கள் உறுதுணையில் திருமண பந்தத்தில் 1993ம் ஆண்டு இல்லறத்தில் உள் நுழைந்தாள் காலங்கள் சில கடக்க உடன் பிறநாதர் கைகொடுக்க கடல் கடந்து வந்தாளாம் லண்டனை அடைந்தாளாம். 2001 ம் ஆண்டு முதல் வெள்ளையர் நாடதனில் வெண்புறாவாய் பறந்தாளாம் பெண்ணவரின் முதல் நிலையாய் தாய்மையை அடைந்தாளாம்.2002ம் ஆண்டு வைகாசி திங்கள் 16ம் நாளன்று மூத்தவனாய், ஒத்தையனாய் மகன் முதல்வனாய் பிறந்தானாம் தன் அருமை புதல்வனுக்கு ஜெனுஷன் என நாமமிட்டு தாங்கி நடை பயின்றால் தரணியில் இவர் உயர்ந்தாள் அழகான கல்வியிட்டு அன்றாடம் பண்புரைத்து அன்புருகும் பாசத்தை அறிவோடு செயல் நிறுத்தி முன்னேறி நடந்தவளாம் முன்னுதாரணம் ஆனவளாம் பெண்ணிற்கு இலக்கணமாய் பெருமைகள் சேர்த்தவளாம் பெற்றவனை தோள் சுமந்து பெருமையுடன் நின்றவளாம் ஆழகான கல்வியிலே ஆயிரமாம் உழைத்தவனாம் உயிராக அவன் தாங்கி உடனிருந்து காத்தவளாம் உடன் பிறந்தார், பெற்றவனை உயிராகி சுமந்தவளாம். 03-03-2021 உடல் ஆவி பிரியும் வரை உறவோடே நடந்தவளாம் பிரியாத வரமாகி பிரியமுடன் நின்றவளாம் வித்துடலாய் முன் கிடக்க விழியுடைத்து அழுகிறோம் விடை பெற்று இறைபதம் சென்றவளே ஆத்மா சாந்தியே...! ஓம் சாந்தி சாந்தி...! ஓம் சாந்தி சாந்தி...! ஓம் சாந்தி சாந்தி...!

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.