5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு மார்க்கண்டு
வயது 6327 அக்டோபர், 1943 – 2 நவம்பர், 2006
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்களான முருகேசு மார்க்கண்டு, இரத்தினம் சரஸ்வதி, முருகேசு சண்முகரத்தினம், சண்முகரத்தினம் சசி, சண்முகரத்தினம் கிருஷாந் ஆகியோரின் 5ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
உயிர்துளி ஊற்றிய உன்னத தெய்வமே
உண்மை புரட்சியின் அகரம் எழுதிட
வீரப்புதல்வனை போர்க்களமனுப்பிய
உயர்ந்த சிகரமே
தாயாய் தேந்தமிழ் பூவாய்
விடுதலை வேட்கையின்
வற்றாத ஊற்றாய் வாழ்ந்து
தமிழ்காத்த பெருங் கொடையே!
விடுதலை பேரொளி உதிக்கும் முன்னே
உதிர்ந்த உறவே
கொடுக்கும் பகை தகர்த்து
அரும்பணியாற்றிய அற்புத சேவையாளனே!
இறையொன்றே வாழ்வின் சிறை
உடைக்கும் என்று
நம்பிக்கை நடைபோட்ட சிங்கமே
உறவுப் பொய்கையின் என்றும்
புன்னகைக்கும் தங்கமே!
துள்ளித்திரிந்து கல்விச் செல்வத்தை
அள்ளி அணைத்து
வெள்ளிநிலா வாழ்வொளியில்
உறவுக் கதை சொல்லி
நடைபயின்ற நாளைய நம்பிக்கைகளே!
வன்முறைகள் கூத்தாடி
வாசல்வரை வந்த கதை
நேற்றுடன் முடிவாக
நாளை தாயகம் விடிவாக
கல்லறையே "கருவறையாய்"
உருவாகும்......
அதுவரை
உயிர் உள்ளவரை
உங்கள் நினைவோடு
நாம் வாழ்வோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

