ஆறுதல்

நினைவஞ்சலி

கதிர்காமு குணேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிர்காமு குணேஸ்வரி

வயது 596 ஆகஸ்ட், 1936 – 10 பிப்ரவரி, 1996

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கோண்டாவில், கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு குணேஸ்வரி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் கதிர்காமு அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழும் போது துன்பம் தெரியாமல்
வளர்த்து இன்பத்தைத் தந்தவர்கள்
நாளும் பொழுதும் என்பும் உருகிடும்
அன்பினைச் சொரிந்து அணைத்து மகிழ்ந்தவர்கள்
வாழும் வயதினில் தமக்கென வாழாமல்
வீழும் வரைக்கும் எமக்காக வாழ்ந்தவர்கள்
சூழும் வினைப்பயன் ஒன்று கூடி பாழும்
விதியாய் வந்திடப் பாதியிலே போனதென்ன?

தோள் மேலே தொட்டில் கட்டி- எங்களை
கால் நோகாமல் நடை பழக்கிய தந்தை எங்கே?
மார் மேலே தொட்டில் கட்டி- எங்களை
மனம் நோகாமல் நடை பழக்கிய அன்னை எங்கே?
தாயற்றுப் போனால் சீரற்றுப் போய் விடுமாம்
தந்தையற்றுப் போனால் கல்வியற்றுப் போய் விடுமாம்
அந்நிலைக்கு நாங்கள் ஆளாகாமல் காத்துவளர்த்த
புண்ணியர்களை இரு கரம் கூப்பி வணங்குகி்ன்றோம்

முன்னறி தெய்வம் என்று சும்மாவா சொன்னாள் அவ்வை
முன்னேறி நாம் வாழ முதுகெலும்பாய் நின்ற மாதா பிதாவை!
தன்னுயிர் போலே மன்னுயிரையும் தான் நினைத்து
வாழ்ந்த எங்கள் இன்னுயிர்த் தெய்வங்களின் இருபதாம்
ஆண்டு நினைவலைகள் கண்முன்னே மோதிடவே
கண்ணீர் அலையில் கரைகின்றோம் நாமிங்கே!
கண்ணிமை போல் காத்து வளர்த்து நிழல் தந்தவரே!
தண்ணியநிழற் குளத்திருந்தும் வாடுகின்ற
பிள்ளைக் குவளைகளாய் நாமிங்கே!

உங்களின் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— சண்முகராஜா(சண்ரவி- மகன், சுவிஸ்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.