நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசர் அம்பலவாணர் தம்பிஐயா
ஸ்தாபகர்- லக்சுமி ஸ்ரோஸ் பொலனறுவை, சிவா அரிசி ஆலை- நாவற்குழி கைதடி
27 ஆகஸ்ட், 1991
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுருகேசர் அம்பலவாணர் தம்பிஐயா
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசர் அம்பலவாணர் தம்பிஐயா அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 02-03-2016
இராசலட்சுமி தம்பிஐயா
யாழ். சண்டிலிப்பாய் அப்பிளாக்கையைப் பிறப்பிடமாகவும், கைதடி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமுள்ள ஐயா!
“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்”
என்றதன் குறளே தாங்களென மகிழ்ந்த வள்ளுவன்
அவசரமாகத் தங்களை வானுலகம் அழைத்தானோ?
கடந்த கால் நூற்றாண்டில் அங்கேயும்
உங்கள் புகழ் அனைத்திடமும் பரவியதோ?
அன்று பூவுலகில் நீங்கள் விட்டுச் சென்ற
எச்சங்களெல்லாம் இன்று அம்மாவை
“ஈன்றபொழுதினும் பெரிதுவக்க” செய்தமையை
தென்றல் வந்துரைத்ததால்
பாராட்டுவதற்காகச் சென்றவருடம்
அம்மாவை அழைத்து அளவளாவி மகிழ்ந்தீர்களோ?
அம்மா! நீங்கள் ஒரு ஸ்திதப்பிரஜ்ஞன்
கீதாசிரியன் தான் உங்கள் ஆசானோ!
என்றும் எங்களை நீங்கள் அடித்ததில்லை
எந்த அறிவுரையும் வழங்கவில்லை
ஐயாவும் நீங்களும் எமக்களித்ததெல்லாம்
அன்பெனும் அமுதம் தான்
இன்று நாம் சாதகப் பறவைகளாய்
உங்கள் அன்பெனும் துளிக்காக ஏங்குகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

