ஆறுதல்

நினைவஞ்சலி

சின்னையா பொன்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா பொன்னையா

வயது 5527 ஜூன், 1927 – 18 ஜூலை, 1982

பிறந்த இடம்
பளை
வாழ்ந்த இடம்
பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சின்னையா பொன்னையா

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா பொன்னையா அவர்களின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணில் நிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்தக் கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றீர்கள் அப்பா?

பிள்ளைகள் சோர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?

காலங்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில் இருப்பீர்கள் அப்பா!

உங்கள் அத்மா சாந்தியடைய இறவனை வேண்டுகின்றோம்

பொன்னையா நாகமுத்து

திதி: 30-08-2016

யாழ். பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பளை பேராலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நாகமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதம்மா உங்கள்
அன்பு மலர் முகம் பார்த்து!

எம் தந்தை, தனயனின் இழப்பின் மத்தியிலும்
கண்ணில் கண்ணீரும் நெஞ்சில் வைரமும் தாங்கி
எம்மை தாங்கி வளர்த்த தாயே!
தாங்க முடியவில்லையம்மா உங்கள் பிரிவு!

மருமக்களும் என்பிள்ளைகள் தான்
பேரப்பிள்ளைகளும் என்பிள்ளைகள் தான்- என்று
அன்பு காட்டி அரவணைத்து வளர்த்தீர்களே!
தாங்க முடியவில்லையம்மா உங்கள் பிரிவு!

உங்கள் பிரிவால் துடிக்கும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்

பொன்னையா கணேஷ்

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கணேஷ் அவர்களின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அண்ணா
எம் அனைவரையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ?

வானடைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரரே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா

பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம்தான் தெரிகின்றது அண்ணா
நேரில் வரமாட்டாயோ
ஒருதடவை உன் குரல் கேட்காதோ
என ஏங்குகின்றோம்

எங்களை எல்லாம்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொள்ளும்
எம் அன்புச் சகோதரரின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.