நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பூரணம்
வயது 6525 பிப்ரவரி, 1927 – 25 ஏப்ரல், 1992
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககந்தையா பூரணம்
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பூரணம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், சரோஜினிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசசூரியன், சந்திரசூரியன், மற்றும் பாலசூரியன்(கனடா), சரஸ்வதி(கனடா), குணவதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), நவநீதம்(கனடா), கனகசூரியன்(கனடா), யோகசூரியன்(கனடா), தர்மசூரியன்(பிரான்ஸ்), சிவசூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.
அம்மா அம்மா உங்களைப்போல் ஒரு தெய்வம்
இங்கேதுமில்லையம்மா!
அன்புக்கெல்லாம் ஒரு கோயில்
இங்கேதும் இல்லையம்மா!
நாங்கள் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்தாலும்
எங்கள் கடன் தீராதம்மா!
ஆராரோ பாடி எங்களை வளர்த்தாயம்மா!
யாரலும் எங்கள் உறவைப் பிரிக்க முடியாதம்மா!
அன்னையே உந்தன் மடி சாய்ந்து கிடந்திட
நூறு ஜென்மம் வந்து ஏங்குகின்றோம்!
நித்தம் நித்தம் உங்கள் அன்பை பெற்றிட
ஏழு ஜென்மம் வேண்டுமம்மா!
ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயம்மா
ஈரேழு ஜென்மமும் தாயாக வரவேண்டும் அம்மா!!
நாகநாதர் கந்தையா
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், சரோஜினிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசசூரியன், சந்திரசூரியன், மற்றும் பாலசூரியன்(கனடா), சரஸ்வதி(கனடா), குணவதி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), நவநீதம்(கனடா), கனகசூரியன்(கனடா), யோகசூரியன்(கனடா), தர்மசூரியன்(பிரான்ஸ்), சிவசூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையார் ஆவார்.
அப்பா அப்பா உயிர் கொடுத்த தெய்வமப்பா
ஒருவார்த்தை சொல்லாமல் எங்கே சென்றாயப்பா!
நீங்கள் ஓராண்டு எமைப் பிரிந்து சென்றதை
ஒரு நொடியும் ஏற்கவில்லை எங்கள் மனது!
ஊர் உறங்கும் நேரத்திலும் எங்கள்
மனது உறங்கவில்லை எங்களுக்குள்!
உங்கள் நிழலில் நாங்கள் இளைப்பாறினோம்!
உங்கள் வியர்வை சிந்தி பசியாற்றி
உடலுக்குள் இறைவன் தந்த இதயத்தை
வியர்வை வாசம் படிந்த உன் உதிரத்தால்
உணர்வுகளை கற்றுத்தரும் அன்பின் உலகமப்பா!!
எங்கள் இதய தெய்வங்களின் ஆத்மா
சாந்தி பெற வேண்டி வணங்குகின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

