மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மென்டிஸ் யேசுதாசன்
வயது 4928 செப்டம்பர், 1969 – 21 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மென்டிஸ் யேசுதாசன் அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன், அருள்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அரசு, டெய்சி, பாப்பா, அன்ரன்(பிரான்ஸ்), வசந்தி, பெரியராணி, சின்னராணி, வலன், றொபேட், சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரீனா, ராசா, காலஞ்சென்ற அன்ரனிதாஸ், சுனித்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன், ஆல்டின், விசயன், பிறின்சி, ஜெறின், ஜெகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள இடமும்,கிறிஸ்தவ மக்கள் செறிந்து வாழும் பிரதேசமும், அன்பு நிறைந்த மக்களாகவும், வீரம் நிறைந்தும் அநீதியைக் கண்டு தட்டிக்கேட்கும் இடமாக விளங்கும் நாவாந்துறை கிராமத்தில் 28/SEP/1969 இல் யேசுதாசன் அருள்மணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் மென்டிஸ் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அரசு, டெய்சி, பாப்பா, அன்ரன், வசந்தி, பெரியராணி, சின்னராணி, வலன், றொபேட், சுதா ஆகிய உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன்,மரீனா, ராசா, அன்ரனிதாஸ், சுனித்தா, சந்திரன், ஆல்டின், விசயன், பிறின்சி, ஜெறின், ஜெகன் ஆகியோரின் அன்பு மைத்துனராகவும் மகிழ்ந்து வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கியதுடன், நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார், இவ்வாறு நண்பர்கள்,உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.04.2019 இல் 49 வயதில் பிரான்ஸில் உள்ள Paris நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"நாவாந்துறை மண்ணின்
...........நல் உறவே
நண்பர்கள் சூழ்ந்த
...........நல் உயிரே
உடன் பிறப்புகளுடன்
.......... உழைத்து வாழ்ந்து
உலகை விட்டு
......... உறவுகளை பிரிந்தாயே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

