ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மைக்கேல் பேரின்பநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மைக்கேல் பேரின்பநாயகம்

ஓய்வுபெற்ற பொலிஸ் ஆணையாளர்(Retired Police Officer)

வயது 842 செப்டம்பர், 1934 – 12 ஜூன், 2019

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மைக்கேல் பேரின்பநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்

உங்கள் பிரிவால் துயருறும்மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த ஆனைக்கோட்டையில் புகழ் பூத்த சீமான் திரு.மிக்கேல்பிள்ளை அவர்தம் பாரியார் திருமதி பிறான்ஸ்கம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 02/SEP/1934 ஆம் ஆண்டில் திரு.மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் இவ் அழகிய பூமியில் குணம் செல்வம், புஸ்பநாயகி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி பொன்னையா சிசீலியா தம்பதிகளின் அன்பு மகளான இந்திரா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக Bernard, ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து Jason, Jessica, Genney, Johnathan, Marshal, Marcus, Michelle, Joshua, Joel, Kevin, Kilvin, Jaquelin, Aiden, Gideon போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் பொலிஸ் ஆணையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 12.06.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கடமை வீரன் எங்கள்
காவல் தெய்வம்
மடமை போக்கிய
மாசற்ற உள்ளம்
செந்தணல் பார்வை
செந்தமிழர் வீரம்
வேற்று நாட்டில் உயிர்
விடை பெற்றதே

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.