மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோகனகாந்தன் கந்தையா
பேராதனை MSC Agriculture Eng
வயது 6526 டிசம்பர், 1953 – 11 ஜூன், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Brown வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனகாந்தன் கந்தையா அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கமலாம்பிகை(இளைப்பாறிய ஆசிரியர்கள்- புங்குடுதீவு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற கனகரத்தினம், விமலாம்பிகை(ஆசிரியர்கள்- நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Pat, Sajanth, Thilo ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Renuka, Eva ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயாதேவி, ஞானகாந்தன், உமாதேவி, காலஞ்சென்ற தேவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், அனுசியா, சர்மிளா, இராஜேஸ்வரி, இளங்கோ, இளவழகனார், ஞானேஸ்வரி, சிலோன்மணி, அன்பழகன், குமாரசிறி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Zacharia, Rebecca, Reena, Mya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவில் 26/DEC/1953 ஆம் ஆண்டில் ஆசிரியர்களான திரு.திருமதி கந்தையா கமலாம்பிகை தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.மோகனகாந்தன் அவர்கள் சாயாதேவி, ஞானகாந்தன், உமாதேவி, தேவகாந்தன் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் ஆசிரியர்களான திரு.திருமதி கனகரத்தினம் விமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளான நளினேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து Pat, sajanth, thilo எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து Renuka, Eva போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து zacharia, Rebecca, Reena, Mya போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் MSC Agriculture Eng ஆக கல்வி கற்றதுடன் நல்ல நட்புடன் பழகும் குணமும் நகைச்சுவை பேச்சும் பாச உணர்வும் கொண்டவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 65 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கல்வியில் சிறந்த கலங்கரை
விளக்கே
நல்மனம் கொண்ட நாதன்
உள்ளமே
வல்லினம் போல் சிறப்புற்று
விளங்கி
கல்லாய்ப் போனீர் கண்ணீர்
சிந்தியழ
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

