மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோகனராஜ் உடுவில் சிவானந்தன்
பேராசிரியர், இருதய சிகிச்சை நிபுணர்
வயது 622 அக்டோபர், 1956 – 16 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Leeds
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திண்ணைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leeds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர் மோகனராஜ் உடுவில் சிவானந்தன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் சிவானந்தன், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நிர்மலராஜ்(நிர்மலன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆரணி, அருளினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,மக்கள் செறிந்து வாழும் பகுதியும்,யாழ்ப்பாணத்தின் முக்கியமான பகுதியாக விளங்குவதும்,பல்கலைக்கழகம் உள்ள இடமும், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/திருநெல்வேலியில் 02-11-1956 இல் அருளம்பலம் சிவானந்தன் புஸ்பராணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் மோகனராஜ் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நிர்மலராஜ்(நிர்மலன்) உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அன்பும் பண்பும் நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராகவும், வசந்தி அவர்களின் மைத்துனராகவும், ஆரணி,அருளினி போன்ற அழகுப் பிள்ளைகளின் அன்புப் பெரியப்பாவாகவும் விளங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்றாக படித்த இவர் சிறந்த மருத்துவராகவும், இருதய சிகிச்சை நிபுணராகவும் விளங்கியதுடன் பேராசிரியாகவும் கடமை புரிந்தவராவார். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மருத்துவ தொழிலை நேசித்து மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.04.2019 இல் 62 வயதில் பிரித்தானியாவில் உள்ள Leeds நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
மருத்துவ நிபுணர்
......மகத்தான மனிதர்
மனங்களை வென்ற
......மாசற்ற உள்ளம்
மமதை அற்ற
.....மகத்துவ குணம்
மக்கள் நலனாக
......வாழ்ந்து நிலைத்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

