மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முரளி முருகதாஸ்
வயது 281 செப்டம்பர், 1990 – 20 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முரளி முருகதாஸ் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, அருந்தவதேவி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முருகதாஸ், சிவகலா தம்பதிகளின் அன்பு மகனும், அருண் லதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரதாஸ் ஜெயமலர், ஈஸ்வரதாஸ் கலைவாணி, பாரதிதாஸ்(றாஜி) மணிவதனி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கெந்திஸ் பிரதீபா அவர்களின் அன்பு மருமகனும்,
சிவதாஸ்- துசாயினி, சிவநாதன்- ஜனார்த்தனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பவானர்தன் சிவமாலா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
துவாகரன், சிமிதா நிறிபன், சோனியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துயிவன், அஸ்வின், வினாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், கற்பகதரு நிறைந்து உள்ளதும், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டி துன்னாலை தெற்கில் 01-09-1990 இல் முருகதாஸ் சிவகலா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் முரளி அவர்கள் அகிலா ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் நடராசா அருந்தவதேவி/இராசசிங்கம் செல்வராணி போன்றோரின் அணைப்பில் பேரனாக வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் அருண் லதா தம்பதிகளின் அழகுப் பெண்ணான சோபி அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். பெரியவர்களை மதித்து நடக்கும் இனிய குணமும் கொண்டவர்.
இவ்வாறு அப்பா, அம்மா, மனைவி என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.04.2019 இல் 28 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"பால்வடியும் வதனமே
.....பாச உள்ளமே
துன்னாலை மைந்தனே
.....துள்ளிடும் மானே
இளமை வயதில்
....இழந்தோம் உமை
இயக்கம் மறந்து
... இயங்கும் ஆன்மா ஆனோம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

