2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகன் மகாலிங்கம்
M.O.H. Office Kilinochi Clark
வயது 568 அக்டோபர், 1951 – 24 ஆகஸ்ட், 2008
- பிறந்த இடம்
- புதூர்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுத்தூரை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் மகாலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையின் கடமைகள் அன்னை செய்தல் அதிசயமல்ல...
அண்ணனே அன்னையாய் அன்னையின் கடமைகள்
ஆற்றிய தெங்கள் அகத்தினில் நடந்தவை
அகத்தினால் நிறைந்தவை - அதிசயமன்றோ?
முதுமையில் வீழ்ந்த எம் ஈன்றார் கடன்களை - தம்
முதுகினில் ஏற்றார் அருமை அண்ணர்
எம்மை ஏற்ற ஏணியாய் ஆகி
தம்மை மறந்து எமக்காய் வாழ்ந்தார்.
திருமணப்பருவம் நெருங்கிய போதும்
குஞ்சும் குருமனாய் இருந்த எங்களை
நெஞ்சில் நினைத்தார்.
ஏந்திய திருமண பந்தத்தில் - ஏக
புத்திரன் மட்டும் பூமியில் பெற்றார்.
தம் வாழ்வு மீது அக்கறையற்ற தபசி போல் - எங்களை
அக்கறை சேர்க்க தெப்பமாய் ஆனார்
தரைகடலோடி எம்மை திரவியம் தேடவைத்து
புதுவையூரில் புகழ் பெற வைத்தார்.
"பாண்டவர் சிரேட்ட தருமனோ அன்றி
பார் புகழ் தசரத ராமனோ" - என்ன
சோதரர் வாழ யாகக் குழியினில்
ஆகுதியான் அண்ணனே - அண்ணலே
ஆண்டு இரண்டென்ன - ஆயிரம் யுகங்கள்
ஆகிலும் நீரெமக்கு அற்றிய தியாகமும்
காட்டிய வழியும் காலத்தில் கரையுமா?
அன்னை போல் அமைந்த அண்ணி றீற்றாவும்
செல்லப்புதல்வன் மனோஜனும் - எங்கள்
கண்ணுக்குள் நிறைந்த தெய்வங்களாக
எண்ணுவோம் உங்கள் எண்ணப் பூக்களால்
அர்ச்சனை செய்து ஆறுதல் பெறுவோம்.
— யோகராஜா(யோர்ஜ் - சுவிஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

