மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு கந்தசாமி
வயது 8416 ஏப்ரல், 1933 – 30 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி Civic Center ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நமசிவாயம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(தாதியார் பரிபாலகி- வவுனியா வைத்தியசாலை), சாந்தன்(எட்டியாந்தோட்டை), ஆதவன்(கனடா), கவிதா(பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் மலேரியா தடுப்பு இயக்கம்- கிளிநொச்சி), நந்தினி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சின்னத்தம்பி, சிதம்பரப்பிள்ளை, நல்லதம்பி, மாணிக்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீதரன்(வவுனியா), வனிதா(St. Mary College ஆசிரியை- எட்டியாந்தோட்டை), வசிதா(கனடா), லிங்கமூர்த்தி(மருந்தக ஊழியர்- கண்டாவளை), பிறேம்குமார்(ஆசிரியர்- கிளிநொச்சி இராமநாதபுரம் அ. த. க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, அன்னம்மா, அருளம்மா மற்றும் பத்தினிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாகித்தியன், சக்திகா, சுவேதா, சுவந்தா, நிதர்ஷனா, நிருஷனா, நிந்தனா, சங்கவன், சங்கிசை, கனிஇசை, வர்ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

