மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு நடராசா
பொறியியலாளர், S.V.M நிருவனப்பணிப்பாளர்
வயது 6618 நவம்பர், 1952 – 26 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- London, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நடராசா அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான S.V முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.செல்லத்துரை வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, தங்கராஜா, இராஜேஸ்வரி, தங்கரட்ணம், பூமணி, குணரட்ணம், சதானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினராசா, வரலட்சுமி, இராசலட்சுமி, விக்கினேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் ஈழத்துச் சிதம்பரம் அமைந்துள்ள காரைநகர் களபூமியில் 18/NOV/1952 ஆம் ஆண்டில் திரு.திருமதி S.v முருகேசு இராசம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நடராசா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் நாகேஸ்வரி, தங்கராஜா, இராஜேஸ்வரி, தங்கரட்ணம், பூமணி, குணரட்ணம், சதானந்தன், சிவானந்தன் போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி Dr.செல்லத்துரை வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளான பத்மராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்து பொறியியலாளராக பல சேவை செய்ததுடன் S.V.M நிறுவனப் பணிப்பாளராகவும், கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, சகோதரங்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.10.2019 இல் 66 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
உயிரில் கலந்த உடன்பிறப்பே
ஒரே வயிற்றில் உதிர்த்த ஒர் ஒளியே
திங்கள் வதன தேர் அழகே
தங்க மனம் கொண்ட தலை மகனே
அங்கம் நோக அல்லும் உழைத்த
எங்கள் உறவே எம் சகோதரனே
கல்வி கற்று உயர்ந்து கடமை செய்தாய் பொறியியலாளனாய்
கருணை உயிரே பிரிந்தீரே கலங்கி அழுகிறோம் உம் நினைவில்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

