ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா கதிர்காமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா கதிர்காமநாதன்

JP, தலைவர்- கொழும்புத் தமிழ்ச்சங்கம், செயலாளர்- அகில இலங்கை இந்து மாமன்றம், செயலாளர்- உலக சைவப்பேரவை இலங்கைக் கிளை

வயது 7121 மார்ச், 1944 – 2 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கதிர்காமநாதன் அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற நாகலட்சுமி, முத்துலட்சுமி, யோகலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

வனிதா அவர்களின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற நாகம்மா, நீலாம்பிகை, ஞானசோதி, கமலாதேவி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், கந்தையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பாலகௌரி, இளங்கோவன், சுசிகாந்த், பிரேம்காந்த், சோபனா, ரசனிகாந்த், ஹேமானந்த், நிதர்சனன், றோகன், சங்கீதா, நல்லைநாதன், வரதரெத்தினம், கிருபானந்தா, கிருபாநிதி, காலஞ்சென்ற ஜெயப்பிரகாஸ், ஜெயக்காந்த், சுனித்தா, கிருஸ்ணா, சிவராம், ஸ்ரீராம், சுபா, சகிலா, சுகுணா, சுவேந்தன், சுசீந்தன், சுகிர்தா, சுகுந்தன், அபர்ணா, அனந்தன், அனோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவபாதமணி, தில்லைநாதன்(ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற நந்தகுமார்(ஓய்வுநிலை ஆசிரியர்- றோயல் கல்லூரி), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, வீரவாகு, மற்றும் மாணிக்கம்(கனடா), நடராஜா(கனடா), கந்தசாமி, சுந்தரம்பிள்ளை(கனடா), இரத்தினசபாபதி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- றோயல் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் கொழும்பில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-02-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 09,
ஜெயா வீதி,
கொழும்பு- 04

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.