மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா நாகலிங்கம்
இந்திரா கூல்பார் உரிமையாளர்- மருதனாமடம்
வயது 8730 நவம்பர், 1931 – 6 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மருதனாமடம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நாகலிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலெட்சுமி(காந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகெளரி, ஜெயகெளரி, திருக்கேதீஸ்வரன்(ஈசன்), இந்திரகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராமலிங்கம், ஜெயரஞ்சினி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், நல்லதங்கம், நாகரத்தினம்(சுந்தரம்- வட்டகச்சி), சின்னத்துரை, Dr. கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், தம்பிப்பிள்ளை, முத்தையா, பூலோகரம்பை மற்றும் சரோஜினிதேவி(கனடா) பரமேஸ்வரி(மங்கை- பிரான்ஸ்), ராஜேஸ்வரி(கனடா), கனகலிங்கம்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), மகாலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராசா, நடராசா, குணபூபதி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, சசிகலா, தவராணி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஷ்வினி- நிஷாந்தன், ரம்மியா, யாகவி, ஸ்ரீராம், தக்ஷன், கேசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிதா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் 30/NOV/1931 ஆம் ஆண்டில் திரு.திருமதி நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.முத்தையா அவர்கள் இராஜரத்தினம், நல்லதங்கம், நாகரத்தினம், சின்னத்துரை, Dr.கந்தையா எனும் அன்பு உடன் பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி நாகேந்திரம்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகள் மகாலெட்சுமி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து சிவகௌரி, ஜெயகௌரி, திருக்கேதீஸ்வரன், இந்திரகௌரி போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் சிவராமலிங்கம், ஜெயரஞ்சினி, சிவரூபன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்பாகச் செய்து அஷ்வினி-நிஷாந்தன், ரம்மியா, யாகவி, ஸ்ரீராம், தக்ஷன், கேசன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அபிதா எனும் பூட்டப்பிள்ளையுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக வடபகுதியுள்ள தீவுப் பிரதேசங்களில் நல்ல பாதுகாப்பு இல்லாத நிலையில் இடம் இடம்பெயர்ந்து மருதனாமடத்தில் தற்காலிகமாக குடும்பமாக வாழ்ந்தார். அப்போது இந்திரா கூல்பாரை நிறுவி கஷ்டப்பட்டு உழைத்ததுடன்,மேலும் போர் இறுக்கமடைய கனடா சென்று வாழ்ந்து வந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.06.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
புங்குடுதீவில் உதிர்த்த
......புதுத் தெய்வமே
பங்ககுணம் அற்ற
......பாச மலரே
எங்கும் தோன்றும்
........எளிமை மனமே
இங்கே பிரிந்து
......எங்கே போனீர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

