நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமார் சாந்தகுமார்
வயது 5820 ஜூலை, 1961 – 25 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- செட்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, லியோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதுமான நெடுந்தீவை பூர்வீகமாக கொண்டும், இயற்கை வளமான காடுகள்,மயில் அகவும் ஓசையும்,சில்வண்டின் ரீங்காரம் எப்போதும் ஒலிப்பதுடன், வயல் நிலங்கள் நிறைவாக சூழ்ந்த செட்டிக்குளம் 2ஆம் பாமில் 20/JUL/1961 இல் திரு.திருமதி முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வனாக திரு.சாந்தகுமார் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் உருத்திராதேவி,மனோறஞ்சினி,விஜயகுமார்,விமலாதேவி,கலையரசி,உதயக்குமார் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் வன்னியசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் ஆதிதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தினேஷ்குமார்,தானுப்பிரியா,புறுசிகா,றம்மியா,சுறுதிகா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.08.2019 இல் 58 வயதில் பிரான்ஸில் உள்ள Lyon நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
வாழ்வின் ஒளியாய் வந்து நாவில் நல் வார்த்தை பொழிந்து
நிஜமாக வாழ்ந்த உயிரே நிம்மதி தந்த எம்உடன் பிறப்பே
நீங்கள் வாழ்ந்து உயர்ந்துநிழல் தரும் மரமாகி
நித்தம் புன்னகை பொழிந்து
கண்ணென விளங்கிய கருணை உறவே கலங்கி அழுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

