மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரசாமி கைலாசநாதன்
வயது 6330 அக்டோபர், 1955 – 23 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Eastham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி கைலாசநாதன் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைலாசம் சின்னம்மா தம்பதிகள், குருநாகல் மாவட்டம் கல்கமுவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான யாழ் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி பர்வதவர்சினி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியன்(Senior technical Consultant For a Software Company- London), சூரியன்(Christ Church Of Canterbury University) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலோகநாதன், சுவாமிநாதன், காலஞ்சென்ற கைலேஸ்வரி, கனகேஸ்வரி(கங்கா), ரவீந்திரநாத், அமரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிதம்பரநாதன்(பாலா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வரி, சரோஜினிதேவி, வனிதா, சிந்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
கைலாஸ் என்றும் மாதவன் என்றும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் கருணையும் கொண்ட ஒரு உன்னத ஆத்மா. யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் 30/OCT/1955 இல் முத்துக்குமாரசாமி பர்வதவர்சினி தம்பதிகளின் அன்பு மகனாக இவ் அவனியில் வந்துதித்தார்.
சிவலோகநாதன், சுவாமிநாதன், கைலேஸ்வரி, கனகேஸ்வரி, ரவீந்திரநாத், அமரநாதன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பிரியன், சூரியன் எனும் பிள்ளைகளை பெற்று கண்ணின் மணிபோல் பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனக்கே உரித்தான புன்சிரிப்பு கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார்.இவ்வாறு பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 23.08.2019 இல் 63 வயதில் பிரித்தானியாவில் இறைபதம் அடைந்தார்.
”புன்னகை முகமுடன்
கண்ணெதிரே தோன்றுவீரே
அன்பு மனம் மாறாது
அள்ளி அணைத்த உயிரே
தள்ளிப் போனீரே
தவிக்கிறோம் இன்று”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

