ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்துக்குமாரு குணசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துக்குமாரு குணசிங்கம்

முன்னாள் ஆங்கில ஆசிரியர்.

வயது 9310 மார்ச், 1926 – 13 ஜூன், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அரியாலை ஆனந்தன் வடலிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு குணசிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், முத்துகுமாரு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்தாமணி(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

மங்கயற்கரசி(கனடா), இந்துமதி(கனடா), காலஞ்சென்ற லலிதாமதி, தேவராசன்(கனடா), இளங்குகராசன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடேசு மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,

சிவசங்கரப்பிள்ளை அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன், சண்முகசுந்தரம், கனிஷா(கனடா), பானு(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சன், தர்சன், தீபா, றாஜி, சஞ்சி, தர்சனா, சசி, சரணி, றமணன், தனுசன், தனேயன், தகயவன், தர்சன், வினோத், சோபா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிசான், சமிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவு மேற்கில் 10/Mar/1926 ஆம் ஆண்டில் திரு.திருமதி முத்துக்குமாரு தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.குணசிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அழகும் நிறைந்த இவர் நடேசு, தங்கம்மா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான அதிபரான சிந்தாமணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து மங்கயற்கரசி, இந்துமதி, லலிதாமதி, தேவராசன், இளங்குகராசன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து நாகேஸ்வரன், சண்முகசுந்தரம், கணிஷா, பானு போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து லக்சன், தர்சன், தீபா, றாஜி, சஞ்சி, தர்சனா, சசி, சரணி, றமணன், தனுசன், தனேயன், தகயவன், தர்சன், வினோத், சோபா, கீர்த்தனா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ரிசான், சமிரா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் எமது மாணவர்களின் ஆங்கில அறிவை உயர்த்த மிகக் கடினப்பட்டு அதன் வளர்ச்சிக்காக ஆங்கில ஆசிரியராக அல்லும் பகலும் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.06.2019 இல் 91 வயதில் அரியாலையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஆங்கிலக் குருவே எங்கள்
அறிவுக் கடலே
பாசங்கள் நிறைந்த
பண்புள்ளமே
வாசனை மலரே மனதில்
வாழும் தெய்வமே
வேதனை தந்து
விடைபெற்றுச் சென்றீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.