நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரு பேரம்பலம்
வயது 776 ஜூலை, 1944 – 19 ஜூன், 2022
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு மேற்கு, மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநன்றி நவிலல்
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இல. 352, மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பேரம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
நான்கு கடலும் நடு நடுங்கி வீழ்ந்தேபணியும் விறல் நெடுந்தீவில்முத்துக்குமாருவிற்கு முதல் உதித்த சூரியனே!தீவுதனை கடந்துவந்து மல்லாவி வந்துதித்த வரப்புதல்வாஎன்நாளும் மல்லாவி உம் வாழ்வின் வரலாறு !!!
விவசாயமும் எத்தனையோதொழில்வளமும் பெருக்கிதன்வாழ்வின் பொற்காலம்என்நாளும் மல்லாவி என்றுரைப்பார்!
விண்ணேறி வேற்றுநிலம் வந்திறங்கிவாழ்வுதனை பல காலம் கொடுக்கவில்லைபாவியவன் பறித்தெடுத்தான் ஐயோ!இன்நாளும் மல்லாவி காத்திருக்குஎன் நாள்வருவாரென்று!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் வீட்டுக்கிரிகை 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நடைபெற உள்ள மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இங்ஙனம்,
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

