மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துக்குமாரு தங்கவேல்
வல்வை விளையாட்டுக்கழகத்தின் நீண்டகால தலைவரும், சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினரும்
வயது 721 அக்டோபர், 1946 – 10 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை நடராசா வீதி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நடராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தங்கவேல் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, அம்பிகையம்பாள் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(கனடா), காலஞ்சென்ற செந்தில்குமரன், முத்துகுமரன்(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேந்திரன்(கனடா), யோகேஷ்வரன்(லண்டன்), சிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யுவனேஷ்வரி மற்றும் தாமோதரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, சக்திவேல், காலஞ்சென்றவர்களான ரஞ்சன், ராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரலிங்கம், நேசலிங்கம், குணலிங்கம், ரஞ்சிதலிங்கம், பிறேமவதனா, பிறேமலிங்கம், சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஷ்வரன், அஸ்வின், நிஷா, றிஷா, திவ்யன், தீரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், வடமராட்சியின் வீரமிகு பூமியும் எழுச்சிமிகு இளைஞர் படையக் கொண்டுள்ளதும் எதுக்கும் அஞ்சா மனங்கொண்டவர்கள் வாழும் இடமும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வீரமிகு வல்வெட்டித்துறையில் 01-10-1946 இல் முத்துக்குமாரு அம்பிகையம்பாள் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் தங்கவேல் அவர்கள் யுவனேஷ்வரி, தாமோதரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை,சக்திவேல், ரஞ்சன், ராதா ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய வீரம் நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அழகு மகள் சந்திரவதனா அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சாந்தி, செந்தில்குமரன், முத்துகுமரன், பிரியா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் நன்கு அறிவு நிறைந்தவராகவும் வாழ்வில் நற் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர். சிறந்த உதைபந்தாட்ட,கரப்பந்தாட்ட வீரராக விளங்கியதுடன்,வல்வை விளையாட்டுக் கழகத்தின் நீண்டகால தலைவரும்,சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.
இதேவேளை வடமராட்சியில் நடைபெறும் சகல விளையாட்டு போட்டிகளிலும் ஐயா முகம் காணலாம் அவ்வாறு விளையாட்டு உணர்வாளராக விளங்கியதுடன், இவர் வயது வேறுபாடின்றி சகலருடனும் நட்பாக பேசிப் பழகும் அன்பு மனம் கொண்டவர்.
இவ்வாறு மனைவி பிள்ளைகள் , விளையாட்டுகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.04.2019 இல் 72 வயதில் வல்வெட்டித்துறை நடராஜா வீதியிலுள்ள தனது வீட்டில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"வல்வை மகனே
வல்லமை படைத்தவனே
புன்னகை முகமே
புகழின் உச்சமே
நட்பாக பழகும்
நல் மனமே
நாம் உமை நினைத்து
நனைகிறோம் கண்ணீரில்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

