மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா கணேசலிங்கம்
முன்னாள் City Seven Stars Colombo-11 உரிமையாளர்
வயது 7712 பிப்ரவரி, 1942 – 13 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா(பிரித்தானியா), மணிவண்ணன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீலன், சசிகாந்தன்(பிரித்தானியா), ஹிமாலி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன், இராசநாயகி, திரு. திருமதி சுனில்ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரட்னம் மற்றும் நாகேஸ்வரி(செல்லம்மா), கோபாலபிள்ளை(ராசலிங்கம்), புவனேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, தனலெட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்ஷன்(பிரித்தானியா), ஆதித்தியா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
உருத்திரமூர்த்தி(உருத்திரன்), மகேஸ்வரன்(அப்பு), மதிகலா(கலா, ஜேர்மனி), மனோகரன்(பிரான்ஸ்), மங்கலேஸ்வரன்(சுவிஸ்), மஞ்சுளா, மதியழகன்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(இலங்கை), சுரேஷ்குமார்(நோர்வே), காலஞ்சென்ற கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாஜினி(சுபா, பிரித்தானியா), அருளானந்தன்(சுதன், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை 37A, Lily Ave, Wellawatta, Colombo, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் Borella General Cemetery ல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 1ஆம் வட்டாரத்தில் 12/FEB/1942 ஆம் ஆண்டில் திரு.திருமதி முத்தையா பொன்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.கணேசலிங்கம் அவர்கள் தம்பிராசா, கனகரட்னம், நாகேஸ்வரி, கோபாலபிள்ளை, புவனேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான தவயோகமலர் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா, மணிவண்ணன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து சீலன், சசிகாந்தன், ஹிமாலி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்ஷன், ஆதித்தியா, கௌதம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் City seven stars colombo-11 உரிமையாளராக விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.06.2019 இல் 77 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அலைகடல் இசையின்
......... அவதாரம் எடுத்து
மலை என உயர்ந்து
..........மகிழ்ச்சியாய் வாழ்ந்து
பலவகை உதவிகள்
........... பக்குவமாய் செய்து
சிலை என ஆகி
...........சிவனடி சேர்ந்தீர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

