மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் பரமநாதன்
வயது 7524 நவம்பர், 1943 – 4 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி இணுவில் கிழக்கு மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பரமநாதன் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சண்முகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன்(ஹொலண்ட்), விஜிதா(ஜேர்மனி), சசிதா(ஜேர்மனி), கேசவன்(செலிங்கோ லைஃவ் யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சோபிதா, பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலினி(ஹொலண்ட்), வசிகரன்(ஜெர்மனி), வரதராஜன்(ஜேர்மனி), அஜந்தா ஆகியோரின் மாமனாரும்,
சிவசுப்பிரமணியம்(சுவிஸ்), இரத்தினபூபதி, இந்திரலீலா, மோகனலீலா, காலஞ்சென்ற சகுந்தலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், மகேஸ்வரன், சிவேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, பாலசுப்பிரமணியம் மற்றும் புலேந்திரநாதன், வேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாநிதி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனுஷன், அபிஷா(ஹொலண்ட்), வர்ஷா, வர்ணி, கனிமொழி, சாய்ராம்(ஜேர்மனி), துளிர்நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் இணுவில் கிழக்கில் புகழ் பூத்த சீமான் திரு. மயில்வாகனம் அவர்தம் பாரியார் அவர்களின் அருமைப் புத்திரனாக 24/NOV/1943 ஆம் ஆண்டில் திரு.பரமநாதன் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சிவசுப்பிரமணியம், இரத்தினபூபதி, இந்திரலீலா, மோகனலீலா, சகுந்தலா போன்ற சகோதரர்களுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி சண்முகநாதன் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகள் சண்முகேஸ்வரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக அகிலன், விஜிதா, சசிதா, கேசவன், சோபிதா, பிரியா எனும் அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து கமலினி, வசிகரன், வரதராஜன், அஜந்தா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து அனுஷன், அபிஷா, வர்ஷா, வர்ணி, கனிமொழி, சாய்ராம், துளிர்நிலா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நாதன் என அன்பாக அழைக்கப்படும் இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 04.10.2019 இல் 75 வயதில் இணுவிலில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
எங்கள் உறவே........... எளிமை உள்ளமே
தங்க மனமே.......... தாங்கும் வள்ளமே
மங்கா அன்பில்........... மாபெரும் வெள்ளமே
காலன் பார்வையால்.......... வீழ்ந்தீரே பள்ளத்தில்
கலங்கி அழுகிறோம்.......... கருணை உள்ளமே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

