மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் விஸ்வலிங்கம்
அருணோதயா- மகாஜனா கல்லூரி பழைய மாணவர், ஓய்வுபெற்ற கணக்காளர்
வயது 814 மே, 1937 – 20 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Watford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் விஸ்வலிங்கம் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கைச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கேஸ்வரலிங்கம்(ரவி- சிங்கப்பூர்), சுரேந்திரன்(சுரேன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியெக்மே(சிங்கப்பூர்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சுபத்திரா, சந்திரசேகரன், மகேந்திரன் மற்றும் சிவபாக்கியம், தனலக்சுமி, பரமேஸ்வரி, சபாரட்ணம், சூரியசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவனடியான், சச்சிதானந்தன், தர்மஞானேஸ்வரி, தர்மலிங்கம், ஜெயகுமார் மற்றும் சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, கிருஸ்ணவேணி, பாலகிருஸ்ணன், ஜெந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோன்(ஐக்கிய அமெரிக்கா), ஜோடன்(ஐக்கிய அமெரிக்கா), தாரா(சிங்கப்பூர்), மாயா(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
உலகில் அழகிய நாடும் தென் கிழக்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய தரிப்பிட நாடும் தமிழ் பேசும் மக்களை கொண்டதும் வியாபாரத்தின் மையமாக உள்ள மலேசியாவில் 04-05-1937 இல் மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் விஸ்வலிங்கம் அவர்கள் தனபாக்கியம், சுபத்திரா, சந்திரசேகரன், மகேந்திரன், சிவபாக்கியம், தனலச்சுமி, பரமேஸ்வரி, சபாரட்ணம், சூரியசேகரன் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த நாட்டில் அவதரித்தார். மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் தம்பிப்பிள்ளை தங்கைச்சியம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான தவனேஸ்வரி அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக கேஸ்வரலிங்கம்,சுரேந்திரன் போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
இவர் அருணோதயா, மகாஜனா கல்லூரியில் கல்வி கற்று சிறந்த மாணவராகத் திகழ்ந்ததுடன். கணக்காளராக வேலை ஆற்றி ஓய்வு நிலை அடைந்தவராவார். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.04.2019 இல் 81 வயதில் பிரித்தானியாவில் உள்ள Watford நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
மலேசிய மண்ணின்
......மங்கா ஒளியே
மகத்தான ஆத்மாவே
.......மகிழ்ச்சி உள்ளமே
உங்கள் நினைவில்
.....உள்ளம் உருகி
கண்ணில் நீராய்.......காட்சிகள் படமாய்""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

