ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் காந்தராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் காந்தராசா

சீமெந்து கூட்டுத்தாபனம் கணக்காளர் - இலங்கை

வயது 753 நவம்பர், 1943 – 15 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
தாவடி, நெளுக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் தாவடி வடக்கு துரைவீதியைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் காந்தராசா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேரின்பமணி(BA தமிழ்- இளைப்பாறிய ஆசிரியை - கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகப்பிரியா(லண்டன்), கெளரிவித்தியா(நெளுக்குளம்), திருமாறன்(சித்தி விநாயகர் ஸ்ரோர்ஸ்) சிறிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராகுலன்(லண்டன்), முகுந்தன்(நெளுக்குளம்), தேவிப்பிரியா(நெளுக்குளம்), பாலகெளரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இணுவில்), குலசிங்கம்(கோடிஸ்வரன் ஸ்ரோர்ஸ்) மகேஸ்வரி(கண்டி கலகா, இலங்கை), இலங்கைநாதன்(பிரான்ஸ்), இரத்தினச்சிங்கம்(தாவடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜன்(லண்டன்), காசினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நெழுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இணுவிலில் புகழ் பூத்த சீமான் திரு.மயில்வாகனம் அவர்தம் பாரியார் சின்னத்தங்கச்சி அவர்களின் அருமைப் புத்திரனாக 03/NOV/1943 ஆம் ஆண்டில் திரு.காந்தராசா அவர்கள் சுப்பிரமணியம், குலசிங்கம், மகேஸ்வரி, நாதன், இரத்தினசிங்கம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்த இவர் திரு.திருமதி அம்பிகைபாகன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான ஆசிரியை பேரின்பமணி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சண்முகப்பிரியா, கௌரிவித்தியா, திருமாறன், சிறிசங்கர் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து இராகுலன், முகுந்தன், தேவிப்பிரியா, பாலகௌரி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கஜன்,காசினி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன கணக்காளராக சேவையாற்றியதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 15.08.2019 இல் 75 வயதில் வவுனியாவில் உள்ள நெளுக்குளத்தில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

”வளமான வாழ்வில் விளைந்திட்ட உறவே
அளவிலா பாசத்தை அருளிய உள்ளமே
அன்பு மழை அகிலத்தில் தூவி
இன்பப் பூவாய் எம்முடன் வாழ்ந்து
நிழலாய் போனீரே நினைவில் அழுகிறோம்”

பிற அறிவித்தல்கள்

  1. 14 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.