ஆறுதல்

மரண அறிவித்தல்

நா. வை. குகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நா. வை. குகராசா

சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்

வயது 714 பிப்ரவரி, 1948 – 12 ஜூன், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, ஓமந்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நா. வை. குகராசா அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி(போதனா ஆசிரியை- ஓய்வு கால்நடை திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஓவியா(ஆசிரியை- பயிலுனர் மகாவலி தேசியக் கல்வியற் கல்லூரி), நித்திலன்(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்- பதுளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரராசா(குமரிவேந்தன்- ஓய்வுபெற்ற மின்பொறியியல், கண்காணிப்பாளர்), காலஞ்சென்ற அரியராசா(தொலைத் தொடர்பு பரிசோதகர்), பரமராசா(மேனாள் முகாமையாளர் பாற்சபை- கிளிநொச்சி, கனடா), புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பசுபதி புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கோபால்(காவல்துறை அதிகாரி) மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை-கனடா), சிவஞானசுந்தரம் பார்வதி, பேரம்பலம்(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்- கனடா), துரைராசா(மேனாள் பள்ளி முதல்வர்), குலசிங்கம் புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மகேந்திரராசா புனிதலீலாவதி, பரமராசா பவானி, காலஞ்சென்ற கந்தையா புவனேந்திரராசா மற்றும் வஸ்தியாம்பிள்ளை சிறில் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இல.677, செல்வாநகர்(கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திற்கு அருகில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மு.ப 09:30 மணியளவில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மலர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் கரைச்சி பிரதேச சபையில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்று பின்னர் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவில் 04/FEB/1948 ஆம் ஆண்டில் திரு.திருமதி வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.நா.வை.குகராசா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அழகும் நிறைந்த இவர் மகேந்திரராசா, அரியராசா, பரமராசா, புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான கால்நடை திணைக்கள போதனா ஆசிரியை லலிதாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஓவியா, நித்திலன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் சமாதான நீதிவானாகவும், கரைச்சி பிரதேசசபை தவிசாளராகவும், கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவராகவும் செயலாற்றியதுடன், 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தோண்டராகவும் செயற்பட்டவர். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.06.2019 இல் 71 வயதில் கிளிநொச்சியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நெடுந்தீவின் முத்தே மனதில்
நிலைத்திடும் சொத்தே
கடுகளவும் துஞ்சாத
கடமை வீரனே
படு பகைவர் செயலை
பாசமாக ஏற்று
சுடுசொல் தவிர்த்து
சுமைதாங்கி ஆனீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.