ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா  ஜெயபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா ஜெயபாலசிங்கம்

யாழி Master

வயது 5921 பிப்ரவரி, 1960 – 2 ஜூலை, 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கு கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயபாலசிங்கம் அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தெய்வதவபாலன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், நிதர்சன், தரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசோதி, ஞானபாலசிங்கம், தனபாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகாந்தராஜா, சந்திராதேவி, ரதி(ஜேர்மனி), யாதவன் சம்சா(பிரான்ஸ்), திலீபன், யமுனா மதிவண்ணன்(அவுஸ்திரேலியா), சுதர்சனா வில்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலைவாணி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய கோண்டாவில் வடக்கில் 21/FEB/1960 ஆம் ஆண்டில் திரு.திருமதி நடராஜா மனோன்மணிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.ஜெயபாலசிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் ஞானசோதி, ஞானபாலசிங்கம், தனபாலசிங்கம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி தெய்வதவபாலன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் தெய்வசக்தி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தனுசன்,நிதர்சன்,தரண்யா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் யாழி Master ஆன இவர் சிறந்த அறிவாளியும் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.07.2019 இல் 59 வயதில் கோண்டாவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கோண்டாவில் மண்ணின்
கொடை உள்ளமே
அன்பெனும் சிரிப்புடன்
ஆனந்த மனமுடம்
பாண்டவர் போல்
பாச சகோதரங்களுடன்
மண்ணில் வீழ்ந்தாய்
மனங்களை வென்றாய்

பிற அறிவித்தல்கள்

  1. 1 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.