நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா கண்மனி
வயது 8626 பிப்ரவரி, 1933 – 21 ஜூன், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கந்தரோடை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் உரும்பிராயில் புகழ் பூத்த சீமான் திரு.சுப்பிரமணியம் அவர்தம் பாரியார் திருமதி செல்லம்மா அவர்களின் அருமைப் புத்திரியாக 26/FEB/1933 ஆம் ஆண்டில், கண்மனி அவர்கள் பரமேஸ்வரி, தருமலிங்கம், அழகரட்ணம், கனகபூரணம், நிருநாவுக்கரசு, இராசதுரை, மதியாபரணம், பாலசிங்கம், துரைராசா போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி.பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு.நடராசா அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து புவனேஸ்வரி, சிறிநாதன், பாலகிருஸ்னன், சிவநேசன், சண்முகலிங்கம், லோகநாதன், சண்முகநாதன், கமலநாதன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அருந்தவமலர், சீவறட்னம், சத்தியசீலா, கமலராணி, சுபாயினி, சிவச்செல்வி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.06.2019 இல் 86 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அழகிய உறவே அன்பு
உருவே
நிஐமாய் வாழ்ந்து நிழலாய்
மாறி
கண்ணீர் சிந்தி கவலைகள்
கூட்டி
எண்ணி அழவைத்தீர் எமை
பிரிந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

