ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நடராஜா ரவிச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா ரவிச்சந்திரன்

வயது 5822 பிப்ரவரி, 1961 – 11 ஜூன், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Herning

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்த உற்சவத்தின்
மகிழ்நிலையில் நாமிருக்க
கைதவறி நீங்கள் போனதெங்கே

நொருங்கிப் போய் நிற்கின்றோம்
எம் மீள்காலமது
கானலாகிப் போயிற்றே

வலியோடும் விழிகண்ணீரோடும்
நீங்களற்ற வாழ்வில்
தினம் தினம் வெந்து வேகின்றோம்

பொழுதும் விடியுதில்லை….
ஊனும் இறங்கவில்லை…..
தினம் நூறுமுறை அழைக்கின்றோம்…
மீண்டும் எழுந்து வருவாயோ…

திக்கற்ற வழியிடையே
தெய்வமாய் வந்திடுக
உங்களையன்றி அகிலமதில்
யாருண்டு எங்களுக்கு?

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும்,மிக அருகில் உள்ளதும் படித்தவர்களைக் கொண்டதும், நாச்சிமார் அம்மன் அருள்பாலிக்கும் இடமும்,பயன்தரு மரங்களை கொண்ட யாழ்/நாச்சிமார் கோவிலடியில் 22/FEB/1961 இல் திரு.திருமதி நடராஜா மாணிக்கம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.ரவிச்சந்திரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ராஜகுமாரி, சாந்தகுமாரி, வசந்தகுமாரி, விஜயகுமாரி, கமலகுமாரி எனும் உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி இராஜலிங்கம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் விஜயசரோஜா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பிரதாப், பிரியா, பிரியந், பிறீபன், அனிஷன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் கடின உழைப்பாளியும் கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 58 வயதில் டென்மார்க்கில் உள்ள Herning நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வளமான வாழ்வில் விளைந்திட்ட உறவே
அளவில்லா பாசத்தை அருளிய உள்ளமே
அன்பு மழையை அகிலத்தில் தூவி
முற்றப் பூவே முடித்தாயே வாழ்வை
நித்தம் ஏங்கி நினைவில் அழுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.