ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா தில்லைவிநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா தில்லைவிநாயகம்

பிரசித்த நெத்தாரிசு, முன்னாள் தலைவர் - நல்லூர் கிராம சபை

வயது 7831 ஆகஸ்ட், 1940 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் செல்லர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தில்லைவிநாயகம் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

பவான், கௌரிகாந், கார்த்திகா, சைலொளிபவன், திகலொளிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலகவதி, இராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவச்செல்வி, சந்திரவதனி, சிவகுமார், நிரோஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகதாசன், இராஜினிதேவி, காலஞ்சென்றவர்களான அமிர்தரத்தினம், இராசரட்ணம், நவரத்தினம் மற்றும் செல்வராணி, இரத்தினம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண், ஸ்ருதி, கிஷோர், ரோகித், வருண், துஷான், லகுசியா, ரித்திகா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், செறிந்து மக்கள் வாழும் பகுதியும், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி அருள்பாலிக்கும் இடமும், நெல்வயல்கள், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த நல்லூரில்31-08-1940 இல் நடராஜா நாகம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் தில்லைவிநாயகம் அவர்கள் திலகவதி, இராஜகோபால் ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான தங்கரத்தினம் அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக பவான்,கௌரிகாந்,கார்த்திகா,சைலொளிபவன்,திகலொளிபவன் போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் நல்லூர் கிராம சபையின் தலைவராக இருந்து கடமை ஆற்றியதுடன் ஓய்வும் பெற்றார். அத்துடன் பிரசித்த நெத்தார்சாக கடமை செய்தவர். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 78 வயதில் இல.127.செல்லர் வீதி நல்லூரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நல்லூரில் உதிர்த்த
......நல் முத்தே
மனிதனாய் வாழ்ந்து
.......மனங்களை வென்றவரே
ஒளிமுகம் காண
.....ஓடோடி வருக
ஒரு முறை வருக
.......இன்முகம் காட்டுக "" .

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.