ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா யோகேந்திரா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா யோகேந்திரா

வயது 7525 ஜூலை, 1943 – 13 ஜூன், 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
Etobicoke

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, கனடா Toronto Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேந்திரா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியபாமா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிமல்குமார், Matheiu ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், நாகேந்திரன் மற்றும் புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி(ராஜி), லோகினி, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, சாந்தநாயகி, ரேனுகா, லோகநாயகி, கமலாதேவி, இந்திரஜோதி, சம்பத்குமார், காலஞ்சென்ற Frank மற்றும் Sharon ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திலகவதி, தேவராஜா, ஞானராஜா, விமலாவதி, நிமலவதி, நீலாவதி, சுகுனவதி, அமுதவதி, சிவமணி, நவமலர், பொன்குயில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சதாசிவம், Lankha, ராதா, குனசிங்கம், தர்மலிங்கம், இன்பராஜா, ராஜேந்திரன், கந்தசாமி, கணேஷ்வரன், புவிராஜசிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,

ஹன்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்பாண மாவட்டம் உரும்பிராயில் 25/Jul/1943 இல் திரு.திருமதி நடராஜா மகேஸ்வரி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.யோகேந்திரா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாலேந்திரன், மகேந்திரன், நாகேந்திரன், புவனேந்திரன், தெய்வேந்திரன், சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி, லோகினி, ரவிந்திரன் எனும் உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி ஐயாதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் பொன்மயில் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சத்தியபாமா, கார்த்திகா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து நிமல்குமார், Matheiu போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஹன்ஷிகா எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் கடின உழைப்பாளியும் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.06.2019 இல் 75 வயதில் கனடாவில் உள்ள Etobicoke நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

உயிரில் கலந்த உன்னத ஆத்மா
உலகில் சிறந்த உணர்வின் மொழி
உள்ளம் நிறைந்த நினைவின் தடம்
தரணி போற்ற தயவுடன் வாழ்ந்து
பரணி பாட வாழ்ந்து நிலைத்து
பிரிந்து சென்றீர் எங்கும் நிறைந்து

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.