மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா பறுவதம்
வயது 7916 ஆகஸ்ட், 1940 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பறுவதம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாசன், காலஞ்சென்றவர்களான குகநந்தினி, குகநேசன் மற்றும் குகராணி, குகனேந்திரன், குகாநந்தன், குகறஞ்சினி, குமுதினி, குகனேஸ்வரி, குகதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி, தவனேஸ்வரன்(தவம்), கௌரி, சுதர்சனா, சந்திரன், ஜெயக்குமார், கோணேஸ்வரன், ததிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருநாவுக்கரசு, பொன்னம்மா, வசந்தமலர், செல்லமுத்து, காலஞ்சென்ற சிவபாக்கியம், இலட்சுமணன், சுந்தர்ராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தமூர்த்தி, வைத்திலிங்கம், மகேஸ்வரி மற்றும் சாந்தலிங்கம், ஞானசக்தி, காலஞ்சென்றவர்களான அரியரெத்தினம், திருப்பதி, கமலாம்பிகை மற்றும் கந்தசாமி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலட்சிமி, தில்லையம்பலம், கந்தசாமி மற்றும் சந்திரலேகா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கோபிநாத், தினேஷ், கவிதன், கோகுலன், விதுர்ஷா, தகிஷன், தேனுஷா, தர்சிகா, வர்சிகா, கபிலன், கார்த்திகா, டிலக்சனா, டிலக்கியா, சஞ்சயன், தனுஷாந், யனுஷாந், வினுஷாந், விசால், விகாஷ், காவியா, சச்சின், ஆர்த்திகன், தரணி, தரணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் 16/AUG/1940 இல் திரு.திருமதி நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகளாக பறுவதம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் திருநாவுக்கரசு, பொன்னம்மா, வசந்தமலர், செல்லமுத்து, சிவபாக்கியம், இலட்சுமணன், சுந்தர்ராஜா எனும் சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு திருமதி ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அழகு மகன் நடராசா எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தார்.
இவர்களின் வாழ்க்கைப் பயனாக குகதாசன், குகநந்தினி, குகநேசன், குகராணி, குகனேந்திரன், குகாநந்தன், குகறஞ்சினி, குமுதினி, குகனேஸ்வரி, குகதீசன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பெரியவர்கள் ஆனதும் நாகேஸ்வரி, தவனேஸ்வரன், கௌரி, சுதர்சனா, சந்திரன்,ஜெயக்குமார், கோணேஸ்வரன், தசிகா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து கோபிநாத், தினேஷ், கவிதன், கோகுலன், விதுர்ஷா, தகிஷன், தேனுஷா, ததிகா, வர்சிகா, கபிலன், கார்த்திகா, டிலக்சனா, டிலக்கியா, சஞ்சயன், தனுஷாந், யனுஷாந், வினுஷாந், விசால், விகாஷ், காவியா, சச்சின், ஆர்த்திகன், தரணி, தரணிகன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.10.2019 இல் 79 வயதில் கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம் நகரில் மரணம் அடைந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

