ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா இராஜேஸ்வரி

வயது 6620 ஜூன், 1953 – 15 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

லதா, தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற லோகேந்திரராஜா, மதிவதனசோதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

இராமமூர்த்தி, ஆன்மேரி, தில்லைவரணி, அகிலன், தில்லைவண்ணன், தில்லைவருணன், சாமினி, சுர்மிலா, சபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, உலகநாயகி, கோமளநாயகி, ஸ்ரீ முருகதாஸ் மற்றும் கேதீஸ்வரன், அருள் முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒசாணி, ரொசான், தருணி, ஆர்த்தன், அனுசா, நேத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் 20/Jun/1953 இல் திரு.திருமதி துரைராசா மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளாய் இராஜேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு. நடராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக லதா, தவக்குமார் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து திருமணம் முடித்து வைத்து ஒசாணி, ரொசான், தருணி, ஆர்த்தன், அனுசா, நேத்தன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ஈஸ்வரி என அன்பாக அழைக்கப்படும் இவர் கொழும்பில் வாழ்ந்ததுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.08.2019 இல் 66 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அன்பில் சிறந்த அழகு மலரே
அனைத்தையும் விடுத்து பண்பு காட்டி
பாதுகாத்து வளர்த்த பாச உறவே
நின் உருக் காண நித்தம் ஏங்கிறோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.