ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராசா சிவேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராசா சிவேஸ்வரி

வயது 7830 ஜூன், 1941 – 27 டிசம்பர், 2019

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவேஸ்வரி அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெசியா, ஜெசிந்தினி, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கினேஸ்வரன், கனகரத்தினம், செல்வநாயகம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரத்தினேஸ்வரி, இராயேஸ்வரி, கணேசமூர்த்தி, யோகேஸ்வரி, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஜன், டிலக்சன், லவன்சிகா, அங்குசன், கஜானன், தீபிகா, பத்மஜா, அனுஸ்கா, அக்‌ஷயன், அஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிக்கு அச்சுவேலி முளாக்கான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியில் 30/JUN/1941 ஆம் ஆண்டில் திரு.திருமதி செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளாக சிவேஸ்வரி அவர்கள் அழகுக் குழந்தையாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் இரத்தினேஸ்வரி, இராயேஸ்வரி, கணேசமூர்த்தி, யோகேஸ்வரி, விமலச்சந்திரன் போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பெரியவளாகியதும்,திரு.திருமதி சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகன் சின்னத்தம்பி நடராசா எனும் வீரம் நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக ஜெசியா, ஜெசிந்தினி, அனுசியா, ஐங்கரன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பெரியவர்களாகியதும் விக்கினேஸ்வரன், கனகரத்தினம், செல்வநாயகம், அபிராமி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து நிரோஜன், டிலக்சன், லவன்சிகா, அங்குசன், கஜானன், தீபிகா, பத்மஜா, அனுஸ்கா, அக்‌ஷயன், அஜிதன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் கனிவான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த இவர், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.12.2019 இல் 78 வயதில் அச்சுவேலியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 14 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.