மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா யோகேஸ்வரன்
முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊழியர்- மறவன்புலோ
வயது 672 மே, 1953 – 20 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மறவன்புலோ
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர், சவுதி அரேபியா, நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேஸ்வரன் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அமுதவல்லி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஏரம்பமூர்த்தி(கைதடி), காலஞ்சென்றவர்களான மங்களம், சோதீஸ்மதி, ஞானாம்பிகை , குமாரதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி , சிவரூபன், காலஞ்சென்ற நிஷாந்தன், ஜீவிக்கா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்தை வாழ்விடமாகவும் கொண்ட நடராசா யோகீஸ்வரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு...
இந்துமா கடலாற் ஆழல்பெற்ற இலங்கை மனைவித் திருநாட்டின் வடபால் வளம் பல நிறைந்து காணப்படும் பிரதேசம் யாழ்ப்பாணமென்னும் பெருமை பெற்ற நகரமாகும். யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையை அண்மித்துள்ள தொன்மை பல பெற்று விளங்கும் பிரதேசம் தென்மராட்சி ஆகும். இப்பிரதேசத்தில் பனை, தென்னை, பழ மரங்கள், வயல் நிலம் ஆகியன மக்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. தென்மராட்சியின் தென்பால் அமைந்துள்ள கிராமம் மறவன்புலோ என்னும் பிரதேசம் இங்கு இயற்கையாகவே கடல் வளம் அமையப்பெற்று தென்றல் காற்று வீசிய வண்ணம் இருக்கும். இப்பெருமையுறு கிராமத்தில் சீர் சிறப்போடு வாழ்ந்த பெருந்தகைகளே ஏரம்பர் நடராஜாவுக்கும் அமிர்தவல்லிக்கும் உதித்த முத்துக்களான ஏரம்பமூர்த்தி, அமரர் மங்களம், அமரர் சோதீஸ்மதி, அமரர் ஞானாம்பிகை , அமரர் யோகேஸ்வரன், குமாரதேவன் ஆகியோரை இவர்களை பெற்றோர் ஒழுக்க நெறி உடையவர்களாகவும் வளர்ந்து வந்தார். இவர்களின் அமரரான யோகீஸ்வரன் என்பவர் ஆரம்பம் கல்வியினை மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திலும் பின்னர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் கல்வியின்று வந்துள்ளார். வேலையின்மையால் விவசாயத்தினை ஈடுபாடாக உள்ளார், பின்னர் தொழில் நிதிக் தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 1975ம் ஆண்டளவில் கிளை முகாமையாளராக 10 வருடம் பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்னர் உசன் மிருசுவில் பிரதேசத்தில் வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வி பரமேஸ்வரியை திருமணம் செய்து இவர்களது அருளாட்சியால் அவதரித்த ஜனனி, சிவரூபன், ஜீவிக்கா, கஜேந்திரன், அமரரான நிஷாந்தன், கஜேந்திரன், ஜீவிக்கா என்போர்களாவர். பின்னர் 2002ம் ஆண்டளவில் வெளிநாடு சென்று நெதர்லாந்து நாட்டில் தனது பிள்ளைகளின் வளர்ச்சிக்கா உழைப்பதற்கு சென்றபோது இருதய நோயால் பீடிக்கப்பட்டு அங்கு தனிமையில் மிகவும் கஸ்டப்பட்டு தமது பிள்ளைகளுக்கா வாழ்ந்து வந்த உத்தமன் காலஞ்சென்ற யோகீஸ்வரன் ஆவார்.அவாறிருக்க எல்லோர் உள்ளத்திலும் உறைந்த பண்பாளனாகவும் வாழ்ந்து வந்த போது 20-01-2021 புதன்கிழமை அன்று இலங்கையில் நேரம் மாலை பி.ப 03:00 மணியளவில் நெதர்லாந்து நாட்டில் தை மாத வளர்பிறை அட்டமி திதியில் இறைவனுடன் இரண்டறக் கலந்து அவரது திருப்பாதங்களை சென்றடைந்தார்.அன்னாரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல எமது புளியடி ஞானவைரவர் பெருமானை பிராத்தனை செய்வோமாக.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

