ஆறுதல்

நன்றி நவிலல்

பிறப்பு7 ஆகஸ்ட், 1928
இறப்பு1 ஆகஸ்ட், 2019
நாகலக்ஸ்மி வீரவாகு அவர்களின் படம்

நாகலக்ஸ்மி வீரவாகு

வயது 90

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில், வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

31ம் நாள் நினைவுநாள் பிள்ளைகளின் தவிப்பு

எமையீன்ற எம்தாயே ஏங்கிடவே எமைவிட்டு
எங்கு நீ சென்றிட்டாய்
பெரும் சொத்தாக எமை நினைத்து
பற்றோடு பாசமழை பொழிந்திட்டாய்

தீராத காதலுடன் வறுமையிலும்
எமக்காக தினமுழைத்தாய்
உன்பங்கு உணவினையும்
எமக்கூட்டி மகிழ்ந்திருந்தாய்

கண்ணின் இமைபோல
கவனமுடன் எமைக்காத்தாய்
ஒழுகுகின்ற கூரையெனினும்
ஒழுக்கமுடன் எமைவளர்த்தாய்

பழகுகின்ற எவருடனும்
பாசத்தால் நீ பிணைத்தாய்
உனையிங்கு தேடுகின்றோம்
மறுபடியும் வாராயோ !!!!!

உன்பிரிவால் வாடும் பிள்ளைகள்

அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் மரணச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய கொக்குவில் மேற்கில் 07/AUG/1928 இல் திரு.திருமதி சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அருமை மகளாய் நாகலக்ஸ்மி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி இராசதுரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனான திரு. வீரவாகு என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக இதயராணி, இந்திராதேவி, இந்திரகுமாரி, ஜெகதீஸ்வரி, ஜெயகௌரி, குமுதினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ஸ்ரீகாந்தன், திருப்பரங்கிரிநாதன், சிவதாசன், ஸ்ரீரஞ்சன், செல்வசற்குருநாதன், செல்வகுமார் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ரூபகாந்தன் சுவர்ணா, துணைவன் ஜெகன்னியா, ததீஸ்வரன் சோபியா, சிந்துஜா, உஷங்கர், புனித் நிஷாளினி, கிரிஷாந், விஜித் அஜந்தினி, சிவசொரூபன், கஜன் விதுசிகா, ஜேர்மிலாஹரி, மாதுளா, லக்சனா, லாவண்ணியா, ஜக்சன், நிருஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், துஷாரன், அமினா, அக்சய், ஜாதவ், ஆரியன், எய்தன், லிங்கன், ஜெய்தன் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன்,அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்01.08.2019 இல் 90 வயதில் கொழும்பில் உள்ள வெள்ளவத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

எங்கள் உறவே
உங்கள் மனசு
தங்க உணர்வு கொண்ட
தாய் உள்ளம்
பங்கம் அணுகா
பாதுகாத்த
வெள்ளை உள்ளமே
விடைபெற்றீரே எமைவிட்டு

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.