மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் கோபாலசிங்கம்
வயது 7915 செப்டம்பர், 1939 – 28 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- ஏழாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கோபாலசிங்கம் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராசமலர்(ஏழாலை), குலசிங்கம்(ஏழாலை), சறோஜினிதேவி(ஏழாலை), கண்ணன்(ஏழாலை), றஞ்சினி(கனடா), நிர்மலா(கனடா), நித்தியவதனி(கனடா), ஜெசுதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசநாதன்(ஏழாலை), கிருபைராஜா(ஜேர்மனி), சுமதி(ஏழாலை), மோகனரூபன்(கனடா), நித்தியராஜா(கனடா), மனோகரதாஸ்(கனடா), மதிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பமிலன்(ஏழாலை), கபிலன்(ஏழாலை), காலஞ்சென்ற கிருத்திகா மற்றும் சஞ்சிதா, ஜனோசிகா, அபராஜிதன்- சரணியா, நர்மதா, சுகிர்தன், சயித்(கனடா), நிரோஸ்(கனடா), அஜந்தன்(கனடா), வர்சனா(கனடா), வினுசியா(கனடா), சர்மி(கனடா), தரிசிகா(கனடா), மதுஷ்(கனடா), நிதுஷ்(கனடா), யதுஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இரு சிறார்களின்(New Born) அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும், நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.குப்பிளானில் 15-09-1939 இல் திரு திருமதி நாகலிங்கம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் கோபாலசிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார். மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அழகுப் பெண்ணான கண்மணி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக இராசமலர், குலசிங்கம், சறோஜினிதேவி, கண்ணன், றஞ்சினி, நிர்மலா, நித்தியவதனி, ஜெசுதா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.
இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.04.2019 இல் 79 வயதில் ஏழாலை கிழக்கில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
குப்பிளான் மைந்தன்
......குதூகலப் பார்வை
பாவை முகம்
......பைந்தமிழர் பாவம்
வசீகரப் பேச்சு
.....வாடிய முகம்
பிரிந்ததை நினைத்து
.....விழிநீர் சிந்துறோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

