மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் நித்தியானந்தன்
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை
வயது 7812 ஆகஸ்ட், 1941 – 21 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நித்தியானந்தன் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா(பொன்னடி) தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன்(முன்னாள் முகாமையாளர், வீரகேசரி- யாழ் கிளை, முகாமையாளர், லேக் ஹவுஸ்- யாழ் கிளை), பார்த்திபன்(முகாமைத்துவக் கணக்காளர், பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனிஷா, செளம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினிதேவி(பிரித்தானியா), கிருஷ்ணானந்தன்(கனடா), நிர்மலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயுதபிள்ளை, கமலினி, காலஞ்சென்றவர்களா சிவகுரு, Dr. சிவராஜா, சிவனேஸ்வரி மற்றும் விக்னராஜா(பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா(நோர்வே), செல்வராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா- ராசலட்சுமி, செல்வராஜா- விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,
சாரங்கன், சாம்பவி, ஓவியா, அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 12/Aug/1941 இல் திரு.திருமதி நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு. நித்தியானந்தன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சறோஜினிதேவி,கிருஷ்ணானந்தன்,நிர்மலாதேவி என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜனகன், பார்த்தீபன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து வனிஷா, சௌம்யா போன்றவர்களை திருமணம் முடித்துவைத்து சாரங்கன், சாம்பவி, ஓவியா, அர்ச்சனா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பரந்தன் இரசாயணக் கூட்டுத்தாபனத்தில் கணக்காய்வாளராக கடமை ஆற்றியது மட்டுமல்லாது, சமாதான நீதவானகவும், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபையின் அங்கத்துவராகவும், தவிசாளராகவும் கடமையாற்றிய இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.08.2019 இல் 78 வயதில் கொக்குவிலில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கணிப்பில் சிறந்த கருணை உறவே
பணி ஆற்றி களைத்த செம்மலே
மணி போல் பேச்சின் ஓசையாய்
ஏணியாய் உயர்த்திய எமது உயிரே
காணிக்கை வைத்தோம் ஆத்மா சாந்தியடையட்டும்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

